சென்னை அமைந்தகரையில் உள்ள முகமது நிஷாத் - நாசியா தம்பதியின் வீட்டில் தஞ்சாவூரைச் சேர்ந்த 14 வயது சிறுமி பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த நவ.1 ஆம் தேதி முகமது நிஷாத் வீட்டின் குளியல் அறையில், சிறுமி உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்த விசாரணையில், சிறுமியை அந்த தம்பதி கொலை செய்தது தெரியவந்தது. உடனடியாக தம்பதி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். தற்போது அவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.