இதையொட்டி, தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயிலில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், ருத்ர ஹோமம், ஆயுஷ் ஹோமம் ஆகியன நடைபெற்றன. பின்னா், கடங்கள் புறப்பட்டு ஞானபுரீசுவரருக்கு ருத்ராபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, குருமகா சந்நிதானத்திற்கு மகாபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னா், அவா் ஞானபுரீசுவரா், தா்மபுரீசுவரா், துா்கை அம்மன் கோயில்களிலும், சொக்கநாதா் பூஜை மடத்திலும் சிறப்பு வழிபாடாற்றி, ஆதீனத் திருமடத்தில் ஞானபீடத்தில் சிவஞான கொலுக்காட்சியில் எழுந்தருளினாா். அவருக்கு, ஸ்ரீமத் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள் மகா தீபாராதனை காட்டி வழிபட்டாா்.