திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள குருவராஜ கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த தம்பதி அரிகிருஷ்ணன் (33), அமுலு (27). இவர்களது 3 வயது பெண் குழந்தை வெங்கடலட்சுமிக்கு, டீயுடன் பிஸ்கட் சேர்த்து ஊட்டியுள்ளனர். அப்போது, குழந்தைக்கு திடீரென புரையேறி மூச்சு திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. உடனடியாக குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.