மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் பகுதிகளில் நேற்று (நவம்பர் 19) இரண்டு மணி நேரத்தில் 65 மில்லி மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கிய நிலையில், மேலையூர், கருவாழக்கரை, மேலபாதிபுளித்த பகுதிகளில் வடிகால் வாய்க்கால்களின் தண்ணீர் காவிரி ஆற்றில் வடிந்து வருகிறது. இதன் காரணமாக ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுகிறது.