மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் பிரசவித்த தாய்மார்களுக்கு அரசின் ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வமணி தலைமை தாங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், பிரசவித்த தாய்மார்கள் ஊட்டச்சத்தான உணவுகளை உட்கொள்வதோடு குழந்தைகளுக்கு அவசியம் தாய்ப்பால் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.