சாலை வசதி வேண்டி போராட்டம்

80பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா எடுத்துக்கட்டி சாத்தனூர் ஊராட்சியில் உள்ள பேருந்து நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் போராட்டமானது நடைபெற்றது.

எடுத்துக்கட்டி பேருந்து நிலையத்திலிருந்து மாதா கோவில் தெரு வரை உள்ள சாலையை உடனடியாக சீரமைக்க கோரி, நூதன போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பவுல் சத்யராஜ் தலைமை தாங்கினார். இதில் திரளான பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி