வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 22 ஆம் தேதியான இன்று முதல் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க செல்லும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் தங்கள் விசை படகுகள், பைபர் படகுகள் மற்றும் கட்டுமரங்கள் போன்றவற்றை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.