மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புகழ்பெற்ற ஸ்ரீ சட்டை நாதர் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் நடைபெற்றது.
கிழக்கு கோபுரம் கொடிமரத்து விநாயகர் சன்னதியில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழையில் பக்தி பரவசத்துடன் ஓம் நமச்சிவாய என்ற பஞ்சாட்சர மந்திரம் உச்சரித்தவாறு கிரிவலம் சென்றனர்.
வழி நெடுகிலும் உள்ள கோவில்களில் சூடம் ஏற்றி வழிபட்டு நான்கு வீதிகளை வலம் வந்தனர்.