மின் விபத்துகளால் உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை மின்வாரியம் உயர்த்தியுள்ளது. முன்னதாக, மின் விபத்துகளால் உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த இழப்பீடு தொகை ரூ.10 லட்சமாக மின்வாரியம் உயர்த்தியுள்ளது. புயல், கனமழை போன்ற காலங்களில் மின்கசிவு ஏற்பட்டு ஆங்காங்கே அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகிறது. தொழிலார்களின் நலன் கருதி நிவாரணத் தொகையை உயர்த்தியதாக கூறப்படுகிறது.