சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ராய்ப்பூர் மற்றும் பிலாய்யில் உள்ள பாகேலின் வீடு மற்றும் அவருடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர்களின் வீடுகளிலும் அதிகாரிகள் இன்று (மார்ச் 26) காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில், அமலாக்க இயக்குனரகம் மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக பாகேலின் வீட்டில் சோதனை நடத்தியிருந்தது.