மறைந்த நடிகரும், இயக்குநர் பாரதிராஜாவின் மகனுமான மனோஜ் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மாரடைப்பால் காலமான மனோஜ் உடலுக்கு திரையுலகினர் திரண்டு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், சென்னை நீலாங்கரையில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மலர் அஞ்சலி செலுத்தினர். பாரதிராஜா மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.