2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் உடனான சந்திப்புக்கு பின்னர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமித்ஷா, 2026-ல் என்டிஏ கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் என கூறியுள்ளார். இதன் மூலம் அதிமுக, பாஜக கூட்டணி அமைக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.