வலங்கைமானில் வங்கி அலுவலக உதவியாளர் போராட்டம்

57பார்த்தது
வலங்கைமான் கூட்டுறவு நிலவள வங்கியில் அலுவலக உதவியாளராக பாஸ்கர் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அப்பொழுது அந்த வங்கியில் கணக்காய்வு செய்ததில் தொகை இருப்பு குறைந்துள்ளதாக தெரிகிறது. வலங்கைமான் கூட்டுறவு வங்கியின் செயலாளராக இருந்த வீரமுரசு என்பவர் பணி ஓய்வு பெற உள்ள பாஸ்கரிடத்தில் அவருக்கு சேர வேண்டிய பண பலன்கள் தொகைகளான ரூ1லட்சத்து 14 ஆயிரம் மற்றும் விடுப்பு ஈட்டிய சம்பளம் ரூ1லட்சத்து 36ஆயிரம் அரியர் தொகை 3லட்சத்து 26 ஆயிரம் மற்றும் 16 மாதஊதியம் 1 லட்சத்து 28ஆயிரம் என சுமார்7, 43, 000ரூபாயை வங்கி கணக்கில் குறைவதாக கூறி அதை வழங்க வேண்டிகேட்டுள்ளார். ஒரு மாதத்தில் திருப்பி தந்து விடுவதாகவும் வங்கி செயலாளர் வீரமுரசு பாஸ்கரிடம் கூறியுள்ளார். இதனால் அதிகாரிகள் கேட்கும் பட்சத்தில் பணம் இல்லை என்று சொல்ல முடியாமல் வங்கியின் கணக்கில் தனக்கு சேரவேண்டிய பணத்தை வரவுவைத்துக்கொள்ளும்படி பாஸ்கர் கூறியுள்ளார். ஆனால், அவர்கள் சொன்னது போல் ஒரு மாதத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டிய பணத்தை இழுத்தடித்து வந்துள்ளனர். இதுவரை கொடுத்த பணம் வந்து சேரவில்லை என பாஸ்கர் கூறுகிறார். இதனால் கடந்த 2020 முதல் சேரவேண்டிய பண பலன்கள்இல்லாமல் மிகவும் வறுமையில் வாடிவருவதாகவும், பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் ஏற்படவில்லை என்றும் பாஸ்கர் வேதனை தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி