கோபாலசமுத்திரம் கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியில் இறால் பண்ணை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மக்கள் பேரணியாக செல்ல முயன்றதால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.