திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் பக்தர்கள் வரும் பாதையில் கடும் விஷப்பாம்பு திடீரென வந்ததால் விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் பாம்பை பிடித்து சென்றனர்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயிலாகும் இந்த திருக்கோவிலுக்கு
மலை அடிவாரத்தில் இருந்து வாகனங்கள் மூலமாகவும் பக்தர்கள் நடந்தும் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர் இந்த பகுதியில் மலையடிவாரத்தில் நீதிமன்றம் மற்றும் மலைக்கோவிலுக்கு வரும் பாதையில் திடீரென்று கடும் விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு பாதையை கடந்ததால் சாலையில் வந்ததால் இதனை கடக்க முடியாமல் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்
உடனடியாக திருக்கோயில் நிர்வாகத்தினர் கோயில் ஊழியர்கள் திருத்தணி தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் அளித்தினர்
விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் சாலை ஓரத்தில் பக்தர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய கடும் விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பை லாபகமாக பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனர் இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது