சென்னை திருவொற்றியூரில் 2000 ஆண்டு பழமையான தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் மாசி தேரோட்டம் வெகு விமரிசையாகநடைபெற்றது
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர், தியாகராஜ சுவாமி கோவிலில் மாசி பிரம்மோற்சவம் கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது
தினமும் சந்திரசேகர் சூரிய பிரபை சந்திர பிரபை நாக வாகனம் ரிஷப வாகனம் புஷ்ப பல்லாக்கு என ஒவ்வொரு அலங்காரத்திலும் நான்கு மாட வீதி திகளிலும் வலம் வந்தார் இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது
இதில் சந்திரசேகரர் மனோன்மணி தாயார் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு தேரில் வீற்றிருக்க பக்தர்கள் நமச்சிவாய என பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர் சிவாச்சாரியார்கள் புடைசூழ தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது