மதுரவாயல் தொகுதியில் 11. 96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் அடிக்கல் நாட்டு விழா எம்எல்ஏ பங்கேற்பு
பூந்தமல்லி அருகே மதுரவாயல் தொகுதி வளசரவாக்கம் மண்டலம் 11க்குட்பட்ட ஆலப்பாக்கம் 147 ஆவது வார்டு கங்கை அம்மன் கோவில் தெரு பகுதியில் சி. எம். டி. ஏ சார்பில் சுமார் 11. 96 கோடி ரூபாய் மதிப்பில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. 147 ஆவது வார்டு கவுன்சிலர் ரமணி மாதவன் முன்னிலையில் நடைபெற்ற இந்த அடிக்கல் நாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக மதுரவாயல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காரப்பாக்கம். கணபதி, மண்டலக்குழு உறுப்பினர் நொளம்பூர் ராஜன் , சிஎம்டிஏ அதிகாரிகள், வளசரவாக்கம் மண்டல அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த இந்த புதிய சமுதாய நலக்கூடம் சுமார் 6 மாதத்திற்குள் கட்டி முடிக்க வேண்டுமென ஒப்பந்ததாரர்களிடம் எம்எல்ஏ கணபதி கேட்டுக்கொண்டார். இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.