திருத்தணி அரசு மருத்துவமனையில், ஐசியு வில் சிகிச்சை பெற்று வரும் மூதாட்டியிடம், நள்ளிரவில் மார்நபர் தாலி திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே கீழாந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி விவசாயி. அவரது மனைவி சுந்தரம்மா(60). அவருக்கு 4 நாட்களுக்கு முன்பு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. முதாட்டியை அவரது குடும்பத்தினர் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்து அங்கு அவரை ஐசியு வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில், இரவு ஐசியு வார்டில் தூக்கத்தில் இருந்த மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த சுமார் 1 சவரன் தாலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றது அதிகாலை எழுந்து பார்த்து மூதாட்டி அதிர்ச்சி அடைந்தார் இச் சம்பவம் தொடர்பாக புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐசியு வார்டில் சிகிச்சை பெற்று வரும் மூதாட்டியிடம் நகை திருடிய சம்பவம் தொடர்பாக மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். திருத்தணி அரசு மருத்துவமனையில் நோயாளியிடம் நகை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.