கோவில் பூசாரி பெண்ணை கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு

75பார்த்தது
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த வாசிஸ்வரர் சிவன் கோவில் அமைந்துள்ளது மகா சிவராத்திரி முன்னிட்டு நான்கு கால பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது ஏராளமான பக்தர்கள் அதிக அளவில் ஆலயத்திற்கு வந்து தரிசனம் செய்துவிட்டு சென்று வந்தனர் கோவில் வளாகத்தில் சிவ தொண்டாற்றும் பக்தர்கள் கைலாய வாத்தியங்கள் வாசித்து வந்தனர் கோவிலில் இருந்த பூசாரி சிவா என்பவர் மற்றும் அவரது மகன் இருவரும் கைலாய வாத்தியம் வாசிக்கும் திருவள்ளூரை சேர்ந்த அமலாம்மள் என்று சொல்லக்கூடிய சிவனடியாரை கைலாய வாத்தியம் வாசிக்கக்கூடிய சிவனடியாரை ஆலயத்தில் இருந்து வெளியே போகச் சொன்னதாக கூறப்படுகிறது அவர்களை மரியாதை இல்லாமல் தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது இதனால் கோபமடைந்த சிவ பக்தர்கள் மற்றும் கைலாய வாத்தியம் வாசிக்கும் சிவனடியார்கள் பூசாரி இடம் மரியாதை கொடுத்து பேசுங்கள் என கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது திடீரென பூசாரி சிவா இந்த வாத்தியம் வாசிக்கும் ஒரு பெண்மணியை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் ஆலயத்தில் இருந்த பூசாரி பூசாரியை மன்னிப்பு கேட்க சொன்னதாகவும் ஆனால் அவர் மன்னிப்பு கேட்காமல் நடராஜர் சன்னதியில் பூட்டிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டார் இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி