மேற்கு சூடானில் வடக்கு டார்ஃபர் மாநிலத்தின் தலைநகரான எல் ஃபேஷரில் உள்ள குடியிருப்புகள் மற்றும் தங்குமிடங்கள் மீது துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகள் (RSF) நடத்திய ஷெல் தாக்குதலில் 3 வயது சிறுமி உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 23 பேர் காயமடைந்துள்ளதாக சூடான் ஆயுதப் படைகள் (SAF) தெரிவித்துள்ளது. எல் ஃபேஷரில் உள்ள முக்கிய தளங்களை குறிவைத்து RSF ஆளில்லா விமானங்களையும் ஏவிய நிலையில், ராணுவத்தின் வான் பாதுகாப்பு பிரிவு அவற்றை சுட்டு வீழ்த்தியுள்ளது.