தொழிற்சாலை கழிவுகளால் அவதியுற்று வரும் மக்கள்

85பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரை குருவிமேடு பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் இறக்குமதி ஏற்றுமதி கண்டெய்னர் பாக்ஸ்களை இறக்கி செல்கின்றனர் வல்லூர் தேசிய அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. நிலக்கரி கையாளும் கழிவுகள் தேங்கி நிற்பதனால் அதனை வெளியேற்றுவதற்காக டிப்பர் லாரி மூலமாக சாலை பராமரிப்பு பணி மற்றும் தாழ்வான பகுதிகளுக்கு கொண்டு செல்கின்றனர் லாரிகள் மூலம் அதிக அளவு பாரம் ஏற்றி செல்வதால் சாலைகள் முழுவதும் சாம்பல் கழிவுகள் கொட்டுவதால் கொண்டக்கரை குருவிமேடு குடியிருப்புகளில் படர்ந்து பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுவாச கோளாறு மற்றும் குடிநீர் பருக முடியாமலும் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்
இது தொடர்பாக பலமுறை சாம்பல் கழிவுகள் எடுத்துச் செல்லும் லாரிகளை சிறை பிடித்து பல போராட்டம் நடத்தியும் மாற்று வழியில் இயக்காமல் அதே வழியிலேயே போவதால் இன்று ஆத்திரமடைந்த கொண்டக்கரை பகுதி மக்கள் லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சாம்பல் கழிவுகள் ஏற்றி செல்லும் லாரிகளை முறைப்படுத்தி மாற்று வழியில் செலுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி