கஞ்சா கடத்தி வந்த மூன்று வாலிபர்கள் தமிழக எல்லையில் கைது

72பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ளது சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை
இங்கு தமிழக எல்லையில் பொன் பாடி போலீஸ் சோதனை சாவடியில்
திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் தனிப்படை போலீசார்
வாகன தணிக்கையில் ஈடுபடும் பொழுது
ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் இருந்து 1) ஹரிஷ், வயது (22),
2) நித்தின், வயது (20),
3) மணிகண்டன் வயது (18) ஆகிய மூன்று பேரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து ஒரிசா சென்று ஒரிசாவில் கஞ்சா வியாபாரியிடம் இருந்து கஞ்சாவை வாங்கிக் கொண்டு இந்த ஆறு கிலோ கஞ்சாவை திருப்பதியில் இருந்து
தமிழக அரசு பேருந்தில் சென்னை வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யும் கஞ்சா வியாபாரிகளுக்காக இந்த கஞ்சாவை எடுத்து வரும்பொழுது
பொன் பாடி போலீஸ் சோதனை சாவடியில் இவர்கள் சிக்கி உள்ளனர்
இவர்கள் மூவர் மீதும் கஞ்சா கடத்தி வந்த குற்றத்திற்காக கைது செய்து
திருத்தணி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர் போலீசார் இவர்கள் மீது கஞ்சா கடத்தி வந்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்து கஞ்சாவை பறிமுதல் செய்து திருத்தணி அரசு மருத்துவமனையில் உடல் தகுதி சான்றிதழ் பெற்று திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிபதி உத்தரவின் பேரில் இவர்கள் மூவருக்கும் சிறையில் அடைத்தனர் போலீசார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி