என்னுடைய 2 மகன்களும் இருமொழியில்தான் படித்தார்கள் என தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தார். மேலும், அமைச்சர் பிள்ளைகள் எங்கு படிக்கின்றனர் என்பது முக்கியமில்லை. 34 பேர் படிப்பை விட 8 கோடி மக்கள் கல்வி திட்டம் முக்கியம் என பேசினார். இது குறித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பிடிஆர் மகன்கள் ஆங்கிலம், பிரஞ்சு/ஸ்பானிஷ் படித்தனர். இதுதான் உங்கள் இருமொழி கொள்கையா என கேள்வியெழுப்பியுள்ளார்.