சிறுநீரகங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து மார்ச் மாதம் 2-வது வியாழக்கிழமை ‘உலக சிறுநீரக தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தோராயமான மதிப்பு 10 லட்சம் மக்களுக்கு 800 ஆகவும், இறுதி நிலை சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தோராய மதிப்பு 10 லட்சம் மக்களுக்கு 200 ஆகவும் உள்ளது. சர்க்கரை நோயால் வரும் சிறுநீரகக் கோளாறு (நீரிழிவு நெஃப்ரோபதி) இந்தியாவில் மிகவும் பொதுவான காரணமாகும்.