சிறுநீரக தினம் 2006 முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை கொண்டாடப்படும் உலகளாவிய சுகாதார நிகழ்வாகும். உலகில் 10-ல் ஒருவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைத்து, சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரிப்பது குறித்தும், சிறுநீரக நோய்கள் பற்றிய விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கத்துடனும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.