

திருவள்ளூர்: 5 வீடுகளில் கொள்ளையர்கள் அட்டகாசம்.. பரபரப்பு வீடியோ
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா திருவாலங்காடு செல்லும் மாநில நெடுஞ்சாலையில் உள்ள எல்லப்ப நாயுடு பேட்டை இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் வரிசையாக உள்ள 5 வீடுகளில் யாரும் இல்லாததால் கொள்ளையர்கள் வீடுகளை உடைத்து ராஜேந்திரன் என்பவரது வீட்டில் இருந்து ரூ. 35000 பணத்தை திருடி சென்றுள்ளனர். மேலும் அருகில் இருந்த 4 வீடுகளில் கார்த்திகேயன், சுமதி, ஆனந்தன், சசிகலா தயாளன் ஆகியோர்கள் திருவள்ளூர் - ஆவடி போன்ற தங்கள் பிள்ளைகள் உள்ள பகுதிக்கு உறவினர்கள் வீட்டிற்கு சென்றிருந்தனர். இவர்கள் வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்ட கொள்ளையர்கள் இந்த நான்கு வீடுகளிலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு வீட்டில் மட்டுமே இவர்கள் பணம் சிக்கியதால் இதனை எடுத்துக் கொண்டு ஓடிய கொள்ளையர்கள் மீதி நான்கு வீடுகளில் இவர்களுக்கு பணம் - நகை எதுவும் கிடைக்காததால் அந்த வீடுகளில் இருந்த துணி மற்றும் பொருட்களை சேதம் செய்துவிட்டு தப்பி ஓடினர். அருகில் இருந்த பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஐந்து வீடுகளின் உரிமையாளர்கள் விரைந்து வந்து கனகம்மா சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் மோப்பநாய் ராக்ஷி உதவியுடன் ஐந்து வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.