திருவள்ளூர் அருகே வேடங்கிநல்லூரில் 5 ஏக்கர் பரப்பளவில் 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அடிக்கல் நாட்டப்பட்ட புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை ஆட்சியர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் அருகே வேடங்கிநல்லூரில் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் கடந்த 2022 -23 ஆண்டு உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி திட்டத்தின் கீழ் திருவள்ளூர் நகராட்சி புதிய பேருந்து நிலையம் ஐந்து ஏக்கர் பரப்பளவில் முன்னாள் ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸ் அவர்களால் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. 15 மாதங்களில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என ரூபாய் 31. 57 கோடியில் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் 20 மாதங்கள் ஆகியும் வெறும் 50% கட்டுமானப் பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது பணியை எடுத்த ஒப்பந்ததாரர் மந்தகதியில் செய்து வருவதாக இருந்த புகாரை அடுத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் பார்வையிட்டு அதிகாரிகள் குழுவினருடன் மந்தகதில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார் புதிய பேருந்து நிலைய கட்டுமானத்தை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கட்டுமான ஒப்பந்ததாரருக்கும் ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டார்