சீமானின் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு

75பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் வரும் 16ஆம் தேதி நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெறவிருந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. 'சாதிவாரிக் கணக்கெடுப்பு, சமூக நீதி, பஞ்சமர் நில மீட்பை வலியுறுத்தி நாதக தலைமையில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்த்தேசிய பேரியக்கம், இந்திய தேசிய லீக், புரட்சித் தமிழகம், ஆதித் தமிழர் விடுதலை இயக்கம், கொங்கு மக்கள் முன்னணி, தென்னிந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க உள்ளன.

தொடர்புடைய செய்தி