பூவிருந்தவல்லி - Poovirunthavalli

திருத்தணி: ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர். கே. பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி ரயில் மற்றும் வாகனங்களில் ஆந்திராவுக்கு கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.  இந்நிலையில் இன்று (பிப்ரவரி 23) காலை திருத்தணி ரயில் நிலையத்தில் பறக்கும் படை தனிப் பிரிவு துணை வட்டாட்சியர் சரவணன் தலைமையில் வருவாய் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் சப்தகிரி விரைவு ரயிலில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி கடத்த வைத்திருந்த சுமார் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. அதிகாரிகளை கண்டதும் ரேஷன் அரிசி கடத்த ரயில் நிலைய நடைமேடையில் இருந்த ரேஷன் கடை அரிசி கடத்திச் செல்பவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை திருத்தணியில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా