திருவள்ளூர் மாவட்டம் புதுகும்முடிபூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா இன்று நடை பெற்றது பேச்சு போட்டி நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுகளுடன் தொடங்கி
கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டி சிறப்பித்தனர்
இதில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினர் பொன்னேரி கும்முடிபூண்டி பகுதிகளில் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும்
அவர்களுக்கு பயிற்சியின்போது உணவு வழங்க சட்டமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் அரசு பள்ளி ஆண்டு விழாவில் தெரிவித்தார்
ஆண்டு விழாவில் விழாவில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினரிடம் அரசுப் பள்ளிக்கு கலையரங்கம் அமைத்து தர வேண்டுமென கோரிக்கை வைத்ததுடன் 10
மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொது தேர்வை இப்பள்ளியிலேயே மாணவர்கள் எழுத நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர் உரிய நடவடிக்கை எடுப்பதாக சட்டமன்ற உறுப்பினர் உறுதி அளித்தார்