தமிழகம் முழுவதும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (மார்ச் 28) முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில், மாணவர்கள் காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. மேலும், தேர்வு பணிகளில் ஈடுபடக்கூடிய ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்துதல், மாணவர்கள் பார்த்து எழுதுவதற்கு உதவுதல் போன்ற தவறான செயல்களுக்கு துணை போகக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.