சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் வருங்கால முதல்வர் புஸ்ஸி ஆனந்த் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் தவெகவினர் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஈ.சி.ஆர் சரவணன் பெயரில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தான் அந்த போஸ்டரை ஒட்டவில்லை என ஈ.சி.ஆர் சரவணன் கூறியுள்ளார். மேலும், “இந்த போஸ்டர் செங்கல்பட்டில் ஒட்டப்பட்டு உள்ளது. எனக்கும் அந்த ஏரியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யார் அந்த போஸ்டரை ஒட்டியது என விசாரித்து வருகிறோம்” என விளக்கம் அளித்துள்ளார்.