திருவள்ளூர்: பாஜக தெருமுனை கூட்டம் மின்தடையால் ஆர்ப்பாட்டமாக மாறியது

78பார்த்தது
திருவள்ளூர் அருகே மும்மொழிப் கொள்கையை ஆதரித்து நடைபெற்ற பாஜக தெருமுனை கூட்டம் மின்தடை ஏற்பட்டதால் ஆர்ப்பாட்டமாக மாறியது

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் பொன்னேரி சட்டமன்ற தொகுதி காட்டூரில் மும்மொழி
கொள்கையை ஆதரித்து தெருமுனை கூட்டம் நடைபெற்றது இதில் மாநில சிறப்பு பேச்சாளர் சதிஸ் கலந்து கொண்டு
பேசுகையில் தமிழகத்தில் கழிவுகளை கொட்டும் கேரள முதலமைச்சரிடம் கேட்பதற்கு
முதல்வரால் முடியவில்லை காவிரி தண்ணீர் சொட்டு தண்ணீர் கொடுக்க மாட்டோம் மேகதாதுவில் அணை கட்டுவோம் என கூறும் கர்நாடக டிகே சிவக்குமாரை அழைத்து பேசுவது எதற்காக  சுயநலத்திற்காக முதல்வர் குழு அமைக்கிறார் மக்கள் சிந்திக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக தெருமுனை கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென மின்தடை ஏற்பட்டதால் பாஜகவினர் மின்தடை ஏற்படுத்திய தமிழக மின்வாரியத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் தெருமுனை கூட்டம் ஆர்ப்பாட்டமாக மாறியது. இதில் மாவட்ட தலைவர் சுந்தரம் மாநில அரசு தொடர்பு துறை தலைவர் பாஸ்கரன் ஆர் எம் ஆர் ஜானகிராமன் இருசப்பன் பிரபு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி