

திருவள்ளூர்: பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொதுக்குழு கூட்டம்
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுக்குழு கூட்டம் மணவாளநகரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளரும் மாநில இளைஞர் சங்க செயலாளருமான பொன். கங்காதரன் கலந்து கொண்டு சித்திரை முழு நிலவு மே 11 அன்று மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கும் வன்னியர் சித்திரை பெருவிழா மாநாட்டில் மாநில, மாவட்ட, நகர, பகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் ஒன்றிணைந்து திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 500 வாகனங்களில் மக்களை அழைத்து செல்வது என குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அதற்கான பிரச்சாரங்களை ஆரம்பிக்கவும், சுவர் விளம்பரம் மற்றும் கிராமம் தோறும் ஒன்றிய, நகர, கிளை பொதுக்குழு கூட்டங்கள் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. இதில் மாவட்ட அமைப்பு செயலாளர் வெங்கடேசன், சமூக முன்னேற்ற சங்க செயலாளர் செல்வம், மாநில செயற்குழு உறுப்பினர் கணேசன் உட்பட ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.