தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று (மார்ச். 28) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விஜய் என்ன பேசப்போகிறார்? என தொண்டர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், கூட்டம் நடைபெறவுள்ள இடத்தில், தமிழ்நாடு சட்டப்பேரவை போன்று காட்சியளிக்கும் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் தவெக கட்சியின் கொள்கை தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.