IPL: ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியில் லக்னோ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 191 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்த LSG அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. SRH பௌலர்கள் விக்கெட் எடுக்க முடியாமல் திணறினர். LSG அணி 16.1 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டுமே இழந்து 193 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பூரன் 70 மற்றும் மார்ஷ் 52 ரன்கள் குவித்தனர். 4 விக்கெட்களை வீழ்த்திய LSG அணியின் ஷர்துல் தாக்கூர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.