சுமை தூக்கும் தொழிலாளர்கள் திருவோடு ஏந்தி நூதனப் போராட்டம்

63பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே மேல் திருத்தணியில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கு நுழைவாயிலில் சுமை தூக்குவரின் மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கைகள் வலியுறுத்தி நூதன போராட்டம் இன்று காலை நடைபெற்றது. அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் வீரராகவன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற 50க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் நெற்றியில் நாமமிட்டு திருவோடு ஏந்தி தங்களின் கோரிக்கைகள் வலியுறுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்றும் தொழிற்சங்க தேர்தல் உடனடியாக நடத்த வேண்டும் என்றும் நுகர் பொருள் வாணிபடங்குகளில் காலியாக உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை வட மாநில தொழிலாளர்களை வைத்து ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதை கைவிட்டு உள்ளூர் பகுதியில் உள்ளவர்களுக்கு வேலைவய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு உடனடியாக சுமை தூக்கும் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி