

திருவள்ளூர்: மத்திய சிறைக்குள் வீசப்பட்ட கஞ்சா; போலீசார் வழக்கு பதிவு
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம், புழல் விசாரணை சிறை தண்டனை சிறை மற்றும் மகளிர் சிறை என மூன்று சிறைகள் உள்ளன. இதில் சுமார் 150 பெண் கைதிகள் உள்ளிட்ட நாலாயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்நிலையில் சிறையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் சிறைக்குள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, செல்போன் மற்றும் போதைப் பொருட்கள் அதிக அளவில் நடமாடுகின்றன. இதை அவ்வப்போது சிறை காவலர்கள் சோதனை செய்கின்றபோது பல நேரங்களில் பதிக்க வைக்கப்பட்டிருந்த செல்போன்கள், கஞ்சா பீடிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலையில் சிறையின் வெளியில் உள்ள சுற்று அருகில் பந்து வடிவிலான ஒரு பொருள் இருந்ததைப் பார்த்த சிறை காவலர் ஒருவர் அதை பிரித்து பார்க்க போது அதில் 18 கிராம் கஞ்சா, இரண்டு லைட்டர்கள், மூன்று பீடி கட்டுகள் இருந்தன. அதிகாரி புழல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையின் வெளியில் உள்ள சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த போதைப்பொருட்களை வீசி உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சிறை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்து போதைப் பொருட்கள் வீசிய நபர்களை தேடி வருகின்றனர்.