கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மனைவியை கொலை செய்து சூட்கேஸில் அடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த ராகேஷ் என்பவர் தனது மனைவி கௌரி அனில் சம்பேகரை (32) கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார். பின்னர், அதனை ஒரு சூட்கேஸில் வைத்து அடைத்துள்ளார். இதுகுறித்து மனைவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பேரில் இந்த சம்பவம் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.