மதுரவாயல், பாக்கியலட்சுமி நகரில் கெளதம்/31 என்பவர் வீட்டில் ஜார்ஜில் இருந்த எலக்ட்ரிக் பைக் மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து தனது மனைவி மஞ்சு மற்றும் தந்தை நடராஜன் ஆகியோரை எழுப்பிவிட்டு மேலும் ஒன்பது மாத கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியே தப்பி சென்ற போது தீயானது அனைவர் உடம்பிலும் பற்றியுள்ளது.
இதில் ஒன்பது மாத கைக்குழந்தை எழிலரசிக்கு 50 சதவீதத்திற்காயமும், கௌதமுக்கு 40 சதவீத தீக்காயமும் அவரது மனைவி மஞ்சுவுக்கு 10 சதவீத தீக்காயமும் ஏற்பட்டுள்ளது.
கௌதம், அவரது மனைவி மஞ்சு மற்றும் ஒன்பது மாத கைக்குழந்தை எழிலரசி ஆகியோர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீ விபத்தில் படுகாயம் அடைந்த ஒன்பது மாத கைக்குழந்தை எழிலரசி மற்றும் கௌதம் ஆகியோருக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தீவிபத்து ஏற்பட்ட வீட்டில் துணை ஆணையர் அதிவீரப்பாண்டி, உதவி ஆணையர் உள்ளிட்ட காவல்துறையினர் நேரில் ஆய்வு செய்தனர். இதே போல் தடயவியல் துறையினர் சம்பவ இடத்தில் சோதனை செய்து வருகின்றனர், இது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.