வெற்றியடைந்தது: ஓட்டுநர் இல்லாத மொட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

70பார்த்தது
பூந்தமல்லியில் இருந்து முல்லை தோட்டம் வரையிலான 2. 50கி. மீ தொலைவிற்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கி மெட்ரோ ரயில் சென்றது.
மாலை சோதனை ஓட்டம் நடைபெற இருந்த நிலையில் மின்சார வயர் அறுந்து விழுந்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது 7 மணி நேரத்திற்கு பின்பு இரவு 11;45 மணி அளவில் வெற்றிகரமாக சோதனை ஓட்டம் தொடங்கி ஆளில்லா மெட்ரோ ரயில் சோதனை ஒட்டம் வெற்றிகரமாக சென்றது.
குறிப்பாக ஓட்டுநர் இல்லாமல் தானியங்கியாக மெட்ரோ ரயில் இயங்கும் என கூறப்பட்ட நிலையில் மெட்ரோ ரயிலின் மேல் பச்சை, சிவப்பு நிறத்தில் விளக்குகள் எரிந்த நிலையில் ரயில் உள்ளே மெட்ரோ நிர்வாக அதிகாரிகள், ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தபடி சுமார் 50 க்கும் மேற்ப்பட்டோர் பயணித்த நிலையில் வீடியோ மற்றும் புகைப்பட எடுப்பதை பார்த்து டாட்டா காட்டி கை அசைத்தப்படி உற்ச்சாகமாக மகிழ்ச்சியைய் வெளிபடுத்திய படி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் வெற்றி கரமாக பூந்தமல்லி மெட்ரோ பணிமனையில் தெ்டங்கி முல்லா தோட்டம் வரை சென்று திரும்பவும் வெற்றிகரமாக மெட்ரோ ரயில் புறப்பட்ட இடத்தில் இருந்து மீண்டும் அதே இடத்திற்கு வந்து சேர்ந்து சோதனை ஓட்டம் வெற்றி அடைந்தது, தடைகளை உடனடியாக சரி செய்து மெட்ரோ நிர்வாகம் சோதனை ஓட்டத்தை நிறைவு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி