திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் கடந்த 2005ம் ஆண்டு சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் 630 கோடி மதிப்பீட்டில் கடல் நீரை சுத்தகரிப்பு நாளை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் இந்திய நிறுவனமான IVRCL மற்றும் ஸ்பானிஷ் நிறுவனமான அபெங்கோவா ஆகியோரால் தொடங்கப்பட்டன. 2009 ஆம் ஆண்டு கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு 2010ம் ஆண்டு திட்டம் பயன்பாட்டிற்கு வந்தது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு நூறு கோடி மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆனது சென்னை அதன் புறநகர் பகுதி மக்களின் தேவைக்காக நாள் ஒன்றுக்கு 100 மெகா மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், 25 ஆண்டுகளுக்கு IVRCL ன நிறுவனத்துடன் சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரியம் ஒப்பந்தம் செய்து கொண்டது. மேலும் சுத்திகரிப்பு ஆலையில் சுழற்சி முறையில் பணிபுரியும் 120 ஊழியர்களுக்கு சம்பந்தப்பட்ட, அந்த நிறுவனமே ஊதியம் வழங்க வேண்டும், ஒப்பந்த காலம் முடியும் தருவாயில் நாள் ஒன்றுக்கு 85 கோடி மெகா மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் திறனுடன் மீண்டும் சுத்திகரிப்பு ஆலையை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒப்பந்தமானது. இந்த நிலையில் முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததின் காரணமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியானது 20 மெகா மில்லியலிட்டராக கடந்த ஆண்டு சரிந்து விட்டது.