கவரைப்பேட்டை: லூப் லைன் இரண்டாவது ரயில் பாதை சீரமைக்கும் பணி
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து ரயில் இன்ஜினை அகற்றியபோது மூன்றாவது சக்கரம் பின்பக்கமாக இறங்கியது. மீண்டும் விரைவு ரயில் சக்கரத்தை பழுது பார்த்து இரண்டாவது ரயில் பாதை லூப் லைனில் இருந்து பாக்மதி விரைவு ரயில் லோகோ எஞ்சின் பெட்டியை நீண்ட போராட்டத்திற்கு பின்னர் ரயில்வே ஊழியர்கள் இழுத்துச் சென்றனர். லூப் லைன் இரண்டாவது ரயில் பாதை சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இன்று அக்.13 இரவுக்குள் பணி நிறைவு பெறும் என ரயில்வே ஊழியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.