கும்மிடிப்பூண்டி: பிஜேபி, திமுகவிற்கு எழுதப்படாத ஒப்பந்தம்
பிஜேபிக்கும் திமுகவிற்கும் ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் இருப்பதாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி. அதிமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பிஜேபிக்கும் திமுக விற்கும் ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் இருப்பதாக குற்றம் சாட்டிய அவர் உயர்கல்வி துறை அமைச்சரை மாற்றிய விவகாரம் குறித்து சுட்டிக்காட்டி பேசி பல்வேறு விஷயங்களில் பிஜேபி அரசுக்கு திமுக ஊது குழலாக செயல்படுவதாகவும், பிஜேபி மெஜாரிட்டியாக இல்லாத காரணத்தால் சந்திரபாபு, நித்திஷ் குமார் ஆகியோர் பிஜேபிக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டால் பிஜேபியின் ஆட்சி கவிழ்ந்து விடும் அது போன்ற நேரத்தில் நாங்க இருக்கிறோம் கவலைப்படாதீங்க, நாங்க உங்களுக்கு சப்போர்ட் பண்றோம், அதுபோல் திமுக பிஜேபிக்கு ஆதரவு அளிப்பதாகவும், சந்திரபாபு நாயுடுவையும், நித்திஷ் குமாரையும் மிரட்ட திமுகவை பிஜேபி பயன்படுத்தி வருவதாகவும் அதேபோல் திமுக பிஜேபிக்கு ஆதரவளித்து வருவதால் திமுகவினர் மீது ED ரைட், இன்கம் டேக்ஸ், சிபிஐ இருக்கக் கூடாது இவ்வாறு இருக்கும் பட்சத்தில் பிஜேபிக்கு திமுகவினர் ஆதரவு அளிக்க தயாராக உள்ளதாகவும், இதை மறைக்க அடிப்பது போல் அடிப்பதும் அழுவது போல் அழுவதுமாக கூறியவர், திமுக என்ன சொன்னாலும் பிஜேபி கேட்கும் என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார்.