திருவள்ளூர் வடக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று மாதர்பாக்கம் டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் மாண்புமிகு மகளிர்
தின நிகழ்ச்சி பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது சமூகத்தில் சிறந்து பங்காற்றிய மகளிருக்கு பரிசுகள் வழங்கி திருவள்ளூர் எமபி சசிகாந் செந்தில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் அசினா சையத் பாராட்டினர்
பின்னர் திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் பேசுகையில்
பெண்களுக்கான திட்டத்தை செயல்படுத்தினால் தான் அது போய் உரிய முறையில் சேரும் கர்நாடக மாநிலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2500 ரூபாய் வழங்கினோம்
50 யிரம் கோடி கர்நாடகாவில் பெண்களுக்காக செலவாகிறது இதனால் பொருளாதாரம் உயர்ந்துள்ளது போக்குவரத்து நெரிசல் கூட ஏற்படுவதில்லை கர்நாடகாவில் குடும்பத் தலைவியிடம் திட்டத்தை கொடுத்தால்தான் தேவையான இடத்திற்கு மட்டுமே சென்று சேரும் ஆனால் ஆண்களிடம் கொடுத்தால் டாஸ்மாக் சென்று சேரும்
100 நாள் பணி செய்தவர்களுக்கு ஊதியம் போட முடியாத நிலை தற்போது உள்ளது நம்முடைய பலம் பாஜக அரசுக்கு புரியவில்லை நாம் யாரென்று அவர்களுக்கு தெரியவில்லை ஒரு மாதம் அவகாசம் தருவோம் ஊதியம் போடவில்லை என்றால் பெண்கள் சாலைக்கு போராட வருவார்கள் இங்கு மட்டுமல்ல டெல்லி வரை சென்று அடிப்போம் யார் வீட்டு பணம் எங்கள் மக்களின் வரிப்பணம் என தெரிவித்தார்.