காவலாளியின் உடலை தொழிற்சாலை முன்பு வைத்து போராட்டம்

62பார்த்தது
கும்மிடிப்பூண்டி அருகே உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த காவலாளி குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு கேட்டு அவரது உடலை தொழிற்சாலை வாயில் முன்பாக வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்.


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன புலியூர் கிராமத்தில் உள்ள மைகோ MICO (PLAST INDUSTRIES PVT LTD)தனியார் தொழிற்சாலையில் குருராஜ கண்டிகையை சேர்ந்த கந்தசாமி வயது 57
1 ஆண்டுகளாக காவலாளியாக பணியாற்றினார்
சனிக்கிழமை அன்று 6: 00 மணிக்கு தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றுள்ளார் எதொடர்ந்து சனி ஞாயிறு திங்கள் ஆகிய மூன்று நாட்களில் தொடர்ந்து வேலை செய்துள்ளார் திங்கட்கிழமை அன்று உடல்நிலை சரியில்லாமல் போனதால் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் மருத்துவமனை சென்ற பொழுது உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது

இந்த நிலையில் குடும்பத்தினருக்கு எந்த வித தகவலும் தெரிவிக்கவில்லை எனகூறப்படுகிறது

இறந்தவர் உடலை தொழிற்சாலைக்கு வாசலில் வைத்து போராட்டம் நடத்தினார்கள். அங்கு வந்த காவல்துறையினர் அவர்களிடம் சமரசம் மேற்கொண்டு உரிய இழப்பீடு பெற்று தருவதாக கூறியதை தொடர்ந்து அங்கிருந்து உடலைக் கொண்டு சென்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி