திருத்தணி கோவிலில் காவடி எடுத்து பக்தர்கள் தரிசனம்

68பார்த்தது
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கிருத்திகை மற்றும் செவ்வாய்க்கிழமை தினத்தில் விரதம் இருந்து காவடி எடுத்து வந்து 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் பக்தர்கள்




திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில் ஆகும்

இந்த திருக்கோயிலில் இன்று பங்குனி மாத கிருத்திகை மற்றும் முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை ஆகிய தினத்தில் விரதம் இருந்து பக்தர்கள் மொட்டை அடித்து பால் காவடி புஷ்பக் காவடி பன்னீர் காவடி உடலில் அலகு குத்திக்கொண்டு சாமி தரிசனத்திற்கு மலை கோவிலில் குவிந்துள்ளனர் இதனால் 100 ரூபாய் கட்டண வழி தரிசனத்தில் மூன்று மணி நேரமும் மற்றும் பொது தரிசனத்தில் நான்கு மணி நேரமும் காத்திருந்து பக்தர்கள் கடும் வெயிலில் சாமி தரிசனத்திற்கு சென்று கொண்டிருக்கின்றனர் இதனால் மலைப்பகுதியில் அரோகரா அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் பக்தர்கள் குவிந்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி