திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம் ஏற்பாட்டில் முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் இன்று மாதர்பாக்கம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது இதில் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் எம்எஸ்கே ரமேஷ் ராஜ் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் Tj கோவிந்தராஜன் திமுக கழக பேச்சாளர் சேலம் சுஜாதா ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர் கூட்டத்தினர் அதிக அளவில் வந்திருந்ததால்
ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு புடவைகளை பெற்று சென்றனர்
பொதுக் கூட்டத்தில்.
பெண்கள் அதிக அளவில் கூடியிருந்த நிலையில் திமுக கழக பேச்சாளர் சேலம் சுஜாதா நடிகர் விஜய் மற்றும் பாஜக கட்சி தலைவர்களை ஆபாசமாக பொதுக் கூட்டத்தில் பேசியது கூட்டத்தில் இருந்த பெண்களை முகம் சுளிக்க வைக்கும் விதமாக இருந்தது பின்னர் நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் பெற்ற போது கூட்டம் அதிக அளவில் இருந்ததால் ஒருவருக்கு ஒருவர் முந்திக்கொண்டு போட்டி போட்டு புடவைகளை வாங்கி சென்றனர்.