ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் வந்தடைந்த கிருஷ்ணா நதிநீர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மலர் தூவி வரவேற்க உள்ளனர்
கிருஷ்ணா நதி நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று மாலைக்குள் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு சென்றடையும்
சென்னை மக்களின் குடிநீர் தாகம் தீர்க்க கடந்த திங்களன்று ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர்152 கிலோ மீட்டர் 5 நாட்கள் பயணித்து தமிழக ஆந்திர எல்லையில் ஊத்துக்கோட்டை தாமரைக் குப்பம் ஜீரோ பாயிண்ட்டை இன்று வந்தடைந்தது.
வினாடிக்கு 5கன அடி வீதம் வருகிறது. படிப்படியாக உயர்ந்து நீர்வரத்து அதிகரித்ததும் பொது பணி துறை அதிகாரிகள் மலர் தூவி வரவேற்க உள்ளனர். கிருஷ்ணா நதி நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து மாலைக்குள் பூண்டி சத்தியமூர்த்தி தேக்கத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூண்டி அணையில் தேக்கி அங்கிருந்து புழல் செம்பரம் பாக்கம் ஏரிகளில் தேக்கி சென்னைமக்களுக்கு குடிநீர் வாரியம் மூலம் வழங்கப்படும்.
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ், ஆந்திர அரசு ஆண்டுதோறும் ஒப்பந்தத்தின்படி ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி என, 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது