லோடு ஏற்றிச் சென்ற லாரி மரத்தில் மோதி ஓட்டுனர் உயிரிழப்பு

80பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டையில் இருந்து நாமக்கல்லிற்கு தவுடு மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி ராள்ளபாடி பகுதியில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுனரான நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த திருமுருகன் (42) என்பவர் கழுத்து மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த ஓட்டுனரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையோர மரத்தின் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி